திருச்சியில் போராட்டத்தின் போது சாமியாடிய பெண்கள் - திகைத்து நின்ற அதிகாரிகள்

திருச்சியில் போராட்டத்தின் போது சாமியாடிய பெண்கள் - திகைத்து நின்ற அதிகாரிகள்

திருச்சியில் போராட்டத்தின் போது சாமியாடிய பெண்கள் - திகைத்து நின்ற அதிகாரிகள்
Published on

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெண்கள் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி 61 வது வார்டு முதல் 65 வரை சேகரிக்கப்படுகின்ற கழிவு நீர் முழுவதும், கீழ கல்கண்டார் கோட்டைப் பகுதியில் சுத்திகரிக்கும் வகையில், பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூபாய் 53 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து விவசாய நிலங்களுக்கு இடையில் அமைந்துள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் மாவட்ட நிர்வாகம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கட்டுமான பணிகளை தொடங்கியதாகத் தெரிகிறது.  

இந்நிலையில், இது நத்த களம் பகுதி விவசாயம் சார்ந்தது என்றும், சோழர் காலம் முதல் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலம் என்பதால், வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனையடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் மூன்று ஏக்கர் நிலத்திற்கு பதிலாக வேறு நிலம் தருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இன்று திருச்சி மஞ்சத்திடல் பாலம் பகுதியில் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த நிலத்தில் கோயில் இருப்பதாக சொல்லி பெண்கள் சிலர் கையில் வேப்பிலையுடன் சாமி ஆடியதால் பதட்டம் நிலவியது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றதால் அச்ச நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com