தமிழ்நாடு
அடையாள அட்டைகளை அரசிடமே ஒப்படைக்கிறோம்... இளைஞர்கள் ஆவேசம்
அடையாள அட்டைகளை அரசிடமே ஒப்படைக்கிறோம்... இளைஞர்கள் ஆவேசம்
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து தங்களது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் போராடி வரும் இளைஞர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், தமிழக சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள், திரையரங்கு அமைப்புகள் போன்றவை போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ளது. இதனை கண்டித்து, தங்களது அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.