போராட்டம் தீவிரமடையும்: ஜல்லிக்கட்டு போராட்டக்குழு
ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு சரியான முடிவு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று முதலமைச்சரைச் சந்தித்த பின்னர் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், போராட்டம் நடத்துபவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களுடன் தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழுவினர், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்ததாகத் தெரிவித்ததாகக் கூறினர். மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சரியான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், போராட்டம் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.