“ஸ்டாலினும் திமுகவும் சமூக நீதி துரோகிகள்” அன்புமணி ராமதாஸ்
உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்து 1208 நாட்களாகியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திமுக அரசு மறுப்பதாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்காண பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் ‘சமூக நீதி துரோகி திமுக’ பதாகையை கையில் ஏந்தி திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.
கூட்டத்தில் பேசிய அவர், “தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு இடஒதுக்கீடு வழங்க, சாதி வாரி கணக்கெடுப்பு செய்ய உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. நல்ல அரசு - நேர்மையான அரசு - சமூக நீதி அரசாக இருந்திருந்திருந்தால் நீதிமன்ற தீர்ப்பு வந்த ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு கொடுத்திருபார்கள், ஸ்டாலினும் திமுகவும் சமூக நீதி துரோகிகள்.
வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு ஒரு ஓட்டு கூட போகக்கூடாது; ஸ்டாலினுக்கு வருகின்ற தேர்தலில் பாடத்தை புகட்ட வேண்டும். திமுகவில் வன்னியர் சமூகத்தை சார்ந்த 28 எம்.எல்.ஏக்கள் 5 எம்.பிகள் 4 அமைச்சர்கள் உள்ளனர். யாராவது இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பேசி இருக்கிறார்களா?
ஸ்டாலின் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக போராட்டம் சிறை நிரப்பும் போராட்டம் செய்வோம்; ஜனநாயக வழியில் சிறை நிரப்பும் போராட்டம். அதன் பிறகும் கொடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம்தான். இந்த போராட்டம் வன்னியர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து சமூதாயத்தினருக்குமான போராட்டம் சமுக நீதிக்கான போராட்டம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அன்புமணி ராமதாஸ் நிகழ்த்திய முழு உரையும் கீழே..