சிவகாசியில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரிகையாளரை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங்போர்டு பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக்(46). இவர் வார இதழ் பத்திரிகையில் விருதுநகர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் அந்த தொகுதியைச் சேர்ந்த அமைச்சருக்கும் அதிமுக எம்.எல்.ஏ ஒருவருக்கும் இடையே நிகழும் உட்கட்சி பூசல் குறித்து கட்டுரை வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்ற கார்த்திக்கை அங்கு வந்த மர்ம நபர்கள் 7 பேர் ஹோட்டல் வாசலில் வைத்து கடுமையாக தாக்கினர். இரும்பு கம்பியால் தாக்கியதில், தலை, முகம், வாய் என பல இடங்களில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார் கார்த்திக். இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து இந்த தாக்குதலில் அமைச்சருக்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு யாராவது தாக்குதல் நடத்தியுள்ளார்களா என்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட திமுக சார்பாக சிவகாசி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை துறையினர் கலந்து கொண்டனர். மேலும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com