ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் மெரினாவில் கொளுத்தும் வெயிலிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் கெண்டு வரப்பட்டு தடை நீங்கியதால், தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தடையின்றி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி மணப்பாறையிலும் தடையில்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதனிடையே போராட்டம் தொடங்கிய இடமான அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு வரும் ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம் எனக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், சென்னை மெரினாவில் மக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் போதாது, நிரந்தர தீர்வு வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.