ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம்.. சீர்காழியில் பரபரப்பு

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி, கண்டன முழக்கம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது செய்த போலிசார், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு.

சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நன்நீர் நீராட்டு விழாவைக்காண்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் காரில் பயணித்தார். அந்த சமயத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி, கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலிசார் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com