ராகுல் காந்தி நடை பயணத்திற்கு எதிர்ப்பு: திண்டுக்கல்லில் அர்ஜுன் சம்பத் கைது

ராகுல் காந்தி நடை பயணத்திற்கு எதிர்ப்பு: திண்டுக்கல்லில் அர்ஜுன் சம்பத் கைது
ராகுல் காந்தி நடை பயணத்திற்கு எதிர்ப்பு: திண்டுக்கல்லில் அர்ஜுன் சம்பத் கைது

கன்னியாகுமரியில் நடை பயணம் துவங்கும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த ரயிலில் சென்ற இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் இன்று குமரியில் ராகுல் காந்தி நடை பயணம் தொடங்க இருக்கிறார். இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனரான அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார்.

இதையடுத்து கோ பேக் ராகுல் என்ற முழக்கத்தோடு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், கோவையிலிருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரிக்கு அர்ஜுன் சம்பத் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com