கனிமொழிக்கு வலுக்கும் எதிர்ப்பு: ஆந்திராவிலும் ஆர்ப்பாட்டம்
திருப்பதி ஏழுமலையான் குறித்து தவறாக பேசியதாகக் கூறி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை கண்டித்து ஆந்திராவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி, திருப்பதி கோயிலுக்கு எதுக்கு காவல்துறை பாதுகாப்பு என பேசியதாக கூறப்படுகிறது. கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கனிமொழியின் பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து முன்னணியை சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஏழுமலையான் குறித்து தவறாக பேசியதாகக் கூறி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை கண்டித்து ஆந்திராவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனிமொழி இந்து மக்களின் மனதை புண்படுத்தியதாகக் கூறி ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் ராயல்சீமா போராட்ட சமிதி என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.