\
வி.கே.சசிகலாக்கு எதிர்ப்பு... பன்னீர்செல்வம்‌ தொகுதி மக்கள் உண்ணாவிரதம்

வி.கே.சசிகலாக்கு எதிர்ப்பு... பன்னீர்செல்வம்‌ தொகுதி மக்கள் உண்ணாவிரதம்

வி.கே.சசிகலாக்கு எதிர்ப்பு... பன்னீர்செல்வம்‌ தொகுதி மக்கள் உண்ணாவிரதம்
Published on

தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பு ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சரின் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை கிராம மக்கள், சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்‌‌.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதைபோல சசிகலா முதல்வராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சசிகலாவிற்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com