கோவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம்: பிரதமர் உருவ பொம்மை எரிப்பு

கோவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம்: பிரதமர் உருவ பொம்மை எரிப்பு
கோவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம்: பிரதமர் உருவ பொம்மை எரிப்பு

கோவையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் மோடி உருவ பொம்பையை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுல்தான்பேட்டையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டார். 300 க்கும் மேற்பட்டோர், பல்லடம் பொள்ளாச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.இந்தப் போராட்டத்தால் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .


அதேபோல பாப்பம்பட்டி பிரிவில் நடைபெற்ற போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கோவை திருச்சி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருவேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் மக்கள் எழுப்பினர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com