\
அழகு நிலையம் பெயரில் பாலியல் தொழில் - 4 பெண்கள் மீட்பு

அழகு நிலையம் பெயரில் பாலியல் தொழில் - 4 பெண்கள் மீட்பு

அழகு நிலையம் பெயரில் பாலியல் தொழில் - 4 பெண்கள் மீட்பு
Published on

மதுரையில் அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நான்கு பெண்கள் மீட்கப்பட்டனர். 

மதுரை விராட்டிபத்து பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், டெல்லியை சேர்ந்த ஜனத் என்ற பெண் உட்பட நான்கு பெண்கள் மீட்கப்பட்டனர்.

மேலும், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முதர்சீர், ஜெயவேல், அவருடைய மனைவி ஜீவ பிரியதர்ஷினி மற்றும் அனீஸ் என்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 செல்போன், ஒரு ஸ்வைப் மெஷின், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 53,650 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட பெண்களை திருப்பாலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com