துணிந்து செயல்பட்ட நடிகை ! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்
சமூக வலைதளம் மூலம் நடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த கும்பலை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் கடந்த பதினைந்து வருட காலமாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருடைய whatsapp ல் Relationship Dating Service என்ற பெயரில் ஒரு தகவல் மட்டும் வந்திருக்கிறது. முதலில் அதை சாதாரணமாக நினைத்த ஜெயலட்சுமி அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பின்னர் அதேபோன்ற இரண்டு வாரம் கழித்து மற்றொரு எண்ணில் இருந்து அதே தகவல் வந்திருக்கிறது. அதில் எளிதாக 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை டேட்டிங் சர்வீஸில் சம்பாதிக்கலாம் என வந்திருக்கிறது.
முக்கியமான விஐபிகளுக்கும், அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் இந்த சேவை வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதன் மூலம் எளிதாக ஒரு நாளில் ரூ. 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற தகவலோடு அதற்கான தொடர்பு எண்னும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக வந்திருந்த எண்னை தனது நண்பர்களுடன் தொடர்பு கொண்டு விசாரணை செய்த ஜெயலட்சுமி அதன் பிறகே அந்தத் தகவலை அனுப்பியது பாலியல் தொழில் செய்யும் கும்பல் என தெரிந்திருக்கிறது.
சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் உள்ள பிரபல நடிகையின் புகைப்படங்களுடன் அவர்களுக்கு எவ்வளவு விலை என்பதையும் அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்திருக்கிறார்கள். தமிழத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பிரபலமாக நடித்து வரும் நடிகைகளின் புகைப்படத்துடன் அவர்களுக்கான விலைகளையும் இந்த மர்ம கும்பல் அனுப்பியுள்ளது. அதில் வெளியிட்டுள்ள தகவலையும் சேர்த்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஒவ்வொரு சின்னத்திரை பேஸ்புக் கணக்கு சென்று அதன் மூலம் அவர்களுடைய தொலைபேசி எண்களை எடுத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கவியரசன், முருகப்பெருமாள் என இருவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.