தமிழ்நாட்டில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்ததோடு இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு...

டிஐஜியாக பதவி உயர்வு பெற்றோர்:

1. ரம்யா பாரதி - டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக நியமனம்.
2. பொன்னி - மதுரை சரக காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு
3. பர்வேஷ் குமார் - நெல்லை சரக டிஐஜி
4. சோனல் சந்திரா - டிஐஜியாக பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐயில் பணியை தொடர்வார்.
5. பிரவின் குமார் அபிநவ் - சேலம் சரக டிஐஜி
6. ரூபேஷ் குமார் மீனா - டிஐஜி திண்டுக்கல் சரகம்
7. ஆனி விஜயா - வேலூர் சரக டிஐஜி
8. கயல் விழி - தஞ்சாவூர் சரக டிஐஜி

ஐஜியாக பதவி உயர்வு பெற்றோர்:

9. செந்தில் வேலன் - ஐஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணியில் தொடர்வார்.
10. அவினாஷ் குமார் - ஐஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணியில் தொடர்வார்.
11. அஷ்ரா கார்க் - ஐஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணியில் தொடர்வார்.
12. ஏ.ஜி.பாபு - ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர காவல் ஆணையர்.
13. எழிலரசன் - ஆயுதப்படை பிரிவு ஐஜி
14. செந்தில் குமாரி - ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜி
15. துரைக்குமார் - ஐஜியாக பதவி உயர்வு பெற்று நெல்லை நகர காவல் ஆணையர்.
16. மல்லிகா - ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை நலன் பிரிவு ஐஜி
17. ராதிகா - ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை பொது பிரிவின் ஐஜி
18. ஆசியம்மாள் - ஐஜியாக பதவி உயர்வு பெற்று மாநில உளவுத்துறை ஐஜியாக நியமனம்.
19. மகேஷ்வரி - ஐஜியாக பதவி உயர்வு பெற்று தொழில்நுட்ப பிரிவு ஐஜி
20. லலிதா லட்சுமி - ஐஜியாக பதவி உயர்வு பெற்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜி
21. விஜயகுமாரி - ஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி
22. ஜெயகவுரி - ஐஜியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஐஜி
23. காமினி - ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை குற்றப்பிரிவு ஐஜி
24. கபில் குமார் சரத்கர் - சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர்.
25. செந்தாமரை கண்ணன் - சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜி
26. வனிதா - ஊர்க்காவல் படை ஐஜி
27. மகேந்திர குமார் ரத்தோட் - மனித உரிமைகள் ஆணைய புலனாய்வு பிரிவு ஐஜி
28. சாந்தி - தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு உதவி ஐஜி
29. அபிநவ் குமார் - தமிழக காவல்துறை விரிவாக்கம் பிரிவு உதவி ஐஜி
30. வேதரத்தினம் - சைபர் பிரிவு எஸ்பி,

ஆகியோர் டிஐஜி மற்றும் ஐஜி-களாக பதவி உயர்வு பெற்று பல்வேறு பணிகளில் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com