\
நிர்மலா தேவி விவகாரம்: விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

நிர்மலா தேவி விவகாரம்: விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

நிர்மலா தேவி விவகாரம்: விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
Published on

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேராசிரியை பேசிய விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் தொடங்கினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகள் நான்குபேரை தவறான பாதையில் அழைத்துச்செல்லும் வகையில் பேராசிரியை நிர்மலா தேவி பேசியது தொடர்பான உரையாடல் வெளியாகி, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து, ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கிடையே தமிழகத்தில் டிஜிபி ராஜேந்திரன், நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். 

இந்நிலையில் வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்று, சிபிசிஐடி பிரிவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர், முதற்கட்டமாக இந்த வழக்கு குறித்து இதுவரை விசாரணை நடத்தி வந்த காவல்துறையினரிடம் தகவல்களை கேட்டறிந்தனர். அடுத்தகட்டமாக இன்று சம்பந்தபட்ட கல்லூரியில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com