தமிழ்நாடு
வட சென்னை அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்
வட சென்னை அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்
வட சென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வட சென்னை அனல் மின்நிலையத்தில் உள்ள 2 நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 810 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந் நிலையில், இரண்டாம் நிலையில் உள்ள இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.