ராசி எண்ணைக் கேட்டதால் மறுபடியும் மாட்டினார் தினகரன்

ராசி எண்ணைக் கேட்டதால் மறுபடியும் மாட்டினார் தினகரன்

ராசி எண்ணைக் கேட்டதால் மறுபடியும் மாட்டினார் தினகரன்
Published on

ரத்தான ஆர்.கே.நகர் தேர்தலை தனக்கு ராசியான எண் வரும் தேதியில் நடத்த தினகரன் லஞ்சம் தர முயன்றதாக மற்றொரு குற்றச்சாட்டைச் சொல்லியுள்ளனர் டெல்லி போலீசார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரனிடம், குரல் மாதிரி எடுத்துக் கொள்வதற்கு, டில்லி போலீசுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இந்நிலையில், சுகேஷ் சுந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு நாளை மறுநாள் பிறப்பிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் தர முயன்றதாகவும், 5 தனக்கு ராசியான எண் என்பதால் ரத்தான தேர்தலை மே மாதம் 5-ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யுமாறு தினகரன் சுகேஷிடம் கூறியுள்ளார் எனவும் டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவருடைய தொலைபேசி உரையாடலில் இது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்தனர்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com