\
நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகள் திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்பியின் மனிதநேயம்

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகள் திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்பியின் மனிதநேயம்

நன்னடத்தை காரணமாக 51 ரவுடிகள் திருந்தி வாழ வாய்ப்பு - திருவாரூர் எஸ்பியின் மனிதநேயம்
Published on: 

நன்னடத்தை காரணமாக 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு (HS ரவுடிகள்) திருந்தி வாழ வாய்ப்பளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போக்கிரி பதிவேடு துவங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில், குற்றச் செயல்களில் ஈடுபடாமல், கெட்ட நடத்தைக்காரர்களிடம் தொடர்பு இல்லாமல், கடந்த 3 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இல்லாமல் இருந்துவரும் 51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு, அவர்களது நன்னடத்தை காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் சட்டரீதியாக போக்கிரி பதிவேடு முடிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய ரவுடிகளை திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று (24.12.21) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களது குடும்ப சூழ்நிலை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில்கொண்டு திருந்தி வாழ வாய்ப்பளித்து மனிதநேயத்துடன் நல்வாழ்வு வாழ அறிவுரை வழங்கினார்.

மேலும், தொடர்ந்து அனைவரும் கண்காணிக்கப்படுவர் எனவும், இத்தகைய அரிய வாய்ப்பைமீறி யாரேனும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுத்து போக்கிரி பதிவேடு துவங்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com