திருவேற்காடு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு - நகராட்சி ஆணையர்

திருவேற்காடு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு - நகராட்சி ஆணையர்

திருவேற்காடு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு - நகராட்சி ஆணையர்
Published on

திருவேற்காட்டில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஊசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் பரிசு என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்த வரும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், திருவேற்காடு நகராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 85 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் போன்ற பரிசு பொருட்களை குலுக்கல் முறையில் வழங்கிய நிலையில், நாளை நடைபெறவுள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு என்ற அறிவுப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com