ரேசன் கடைகளில் விதிமீறி தனியார் பொருட்கள் விற்பனை
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் தனியார் நிறுவன பொருட்களை ஊழியர்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மளிகை கடைளில் ஒரு கிலோ ரவை 36 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் அரை கிலோ ரவை 30 ரூபாய்க்கும், பொரிகடலை ஒரு கிலோ 96 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிக விலைக்கு விற்கப்படும் இந்த பொருட்களை வாங்கினால் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியும் என்றும் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.