\
அமைச்சரின் ஆய்வு அறிக்கை தவறானது: தனியார் பால் நிறுவனங்கள்

அமைச்சரின் ஆய்வு அறிக்கை தவறானது: தனியார் பால் நிறுவனங்கள்

அமைச்சரின் ஆய்வு அறிக்கை தவறானது: தனியார் பால் நிறுவனங்கள்
Published on: 

தனியார் நிறுவன பால் சிலவற்றில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பு கூறிய கருத்தை, சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்கள் மறுத்துள்ளனர்.

நேற்று முன் தினம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் விஜய் என்பவர், ஆரோக்கியா, டோட்லா, விஜய் பால் ஆகியவற்றில் கலப்படம் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வழக்கறிஞர் விஜய் காண்பித்த பாலின் தரம் தொடர்பான அறிக்கை தவறானது என்று பால் நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் கூறியிருப்பதும் உண்மைக்கு புறம்பானது என கூறப்படுகிறது. ஆரோக்கியா, டோட்லா, விஜய் பால் நிறுவனங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com