\
வடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் உயரும்

வடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் உயரும்

வடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் உயரும்
Published on

வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “தமிழகத்தை பொறுத்தவரையில் சராசரி மழை அல்லது சராசரியை விட குறைந்த அளவு பொழிய வாய்ப்புள்ளது. சென்னையிலும் இதே நிலையில் தான் மழைபொழிவு அமையும். ஆனால் 2016 ஆண்டைப் போல் 61 சதவிகிதம் குறைந்த அளவு மழைய பொழிய வாய்ப்பில்லை. இந்தமுறை தென்மேற்கு பருவநிலை நன்றாக பொழிந்துள்ளதால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. எனவே வடகிழக்குப் பருவமழையால் நீர்பெருக்கெடுத்து ஓடக்கூடிய வாய்ப்புள்ளது. இதனால் ஒன்று அல்லது இரண்டு காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு மழை பொழிந்தாலே நாம் நல்ல மழைப்பொழிவை பெறலாம்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com