தமிழ்நாடு
காஞ்சிபுரம்: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 53 பேருக்கு கொரோனா!
காஞ்சிபுரம்: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 53 பேருக்கு கொரோனா!
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 53 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் பயின்று வந்த 1,818 மாணவர்களில் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு மாணவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களை பரிசோதனை செய்ததில் இதுவரை 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

