தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் முன்மொழிந்த அளவுருக்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட கட்டணக் கட்டமைப்பை நிர்ணயிப்பதற்கு அவசியமான பரந்த அளவுருக்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் கட்டண நிர்ணயக் குழுவிற்கு உத்தரவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் சங்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார்.