அரசு அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: தனியார் மருத்துவமனைக்கு சீல்
அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த தனியார் மருத்துவமனை மூடி சீல் வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள (குழல்) தனியார் மருத்துவமனை வளாகத்தில் டென்ட் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மருத்துவர் சிவரஞ்சனி என்பவர் சிகிச்சையளித்து வந்தார். தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் கண்ணகி தலைமையிலான மருத்துவ குழுவினர் போலீசாருடன் சென்று, 7-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸ் முலம் ஆரணி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் குழல் கிளினிக் மருவத்துவர் சிவரஞ்சனி மீது அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக கொரோனா நோயாளிகளுக்கு டென்ட் அமைத்து சிகிச்சையளித்து வந்ததால் குழல் கிளினிக்கை இணை இயக்குநர் கண்ணகி மூடி சீல் வைத்தார். மேலும் குழல் கிளினிக்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் சிவரஞ்சனி மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.