\
திருவையாறு: பணத்தை திரும்ப கட்ட நிதி நிறுவனம் நெருக்கடி தருவதாக கிராம மக்கள் புகார்

திருவையாறு: பணத்தை திரும்ப கட்ட நிதி நிறுவனம் நெருக்கடி தருவதாக கிராம மக்கள் புகார்

திருவையாறு: பணத்தை திரும்ப கட்ட நிதி நிறுவனம் நெருக்கடி தருவதாக கிராம மக்கள் புகார்
Published on: 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தனியார் நிறுவனத்தில் குழுக்கள் மூலம் வாங்கிய பணத்தை திரும்ப கட்ட நெருக்கடி தரப்படுவதால் கிராம மக்கள் மனஉளைச்சல் அடைந்துள்ளனர்.

ஆச்சாம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் பலரும் குழுக்கள் மூலமாகவும், தனியாகவும், கடன் வாங்கியுள்ளனர். முழு ஊரடங்கால் பலரும் வட்டி கட்டமுடியாதநிலையில், கூடுதல் வட்டி போடப்போவதாகவும், பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் தனியார் நிதி நிறுவனம் மிரட்டல் விடுப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.

இக்கட்டான நேரத்தில் தனியார் நிறுவனம் நெருக்கடி தருவதையடுத்து, அரசு தலையிட்டு, தனியார் நிறுவனங்கள் கால அவகாசம் தர உத்தரவிடவேண்டும் என்று ஆச்சாம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com