திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் கல்லால் அடித்து கொலைpt
தமிழ்நாடு
திருவள்ளூர்| கல்லால் அடித்து ஒருவர் கொலை... உறவினர்கள் முற்றுகை!
தனியார் நிறுவன ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகையில் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை!
தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன் தனது வீட்டருகே மது அருந்திய இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்ததால் அவரை கல்லால் தாக்கி கொலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர் முற்றுகையிட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர்.