கூடுதலாக ரூ.1 டிக்கெட் கட்டணம்.. தனியார் பேருந்துக்கு ரூ.20,000 அபராதம்!

கூடுதலாக ரூ.1 டிக்கெட் கட்டணம்.. தனியார் பேருந்துக்கு ரூ.20,000 அபராதம்!
கூடுதலாக ரூ.1  டிக்கெட் கட்டணம்.. தனியார் பேருந்துக்கு ரூ.20,000 அபராதம்!

நெல்லையில் கூடுதலாக ரூ.1 டிக்கெட் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கடந்த செப்டம்பர் 1, 2017 அன்று நெல்லையிலிருந்து தூத்துக்குடி சென்று உள்ளார். அப்போது அவரிடம் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

24 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு ரூபாய் வசூல் செய்தது மட்டுமன்றி அதனைக் கேட்டும் கொடுக்கவில்லை என்றும் இது முறையற்ற வணிகம் என்று கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பண இழப்பீடு ஆகியவற்றிற்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவு 5 ஆயிரம், மற்றும் கூடுதலாக வசூல் செய்த தொகை 1 ரூபாயையும் சேர்த்து ரூபாய் 20,001 தனியார் பேருந்து உரிமையாளர் வழங்க வேண்டும். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்கத் தவறும் பட்சத்தில் 6% வட்டியுடன் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com