தமிழ்நாடு
தனியார் பேருந்து கட்டணம் உயர்வு: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் எதிரொலி!
தனியார் பேருந்து கட்டணம் உயர்வு: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் எதிரொலி!
தேனி மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பயன்படுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போக்குவரத்துக்கழக ஊழியர்களில் வேலைநிறுத்தத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராமப்புறங்களுக்கான அரசு பேருந்து சேவை இன்று முற்றிலும் தடைபட்டுள்ளதால் தனியார் பேருந்துகளை மக்கள் நாடவேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்று கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிப்பதாக பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்களின் தேவையை உணர்ந்து, அரசாங்கம் விரைவில் இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.