தனியார் வங்கி கொள்ளை வழக்கு: தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்

தனியார் வங்கி கொள்ளை வழக்கு: தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்
தனியார் வங்கி கொள்ளை வழக்கு: தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்

அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கு - தகவல் தரும் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு வாய்வழி உத்தரவாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் அதிநவீன தொழில்நுட்பமான பல இணைய வழி தொடர்பு வசதியை பயன்படுத்துவதால் கொள்ளையர்கள் குறித்து தகவல் கிடைப்பதில் தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் அவர்கள் தங்கிய இடம் குறித்தும் உறுதியான தகவல் அளித்தாலும் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரும்பாக்கம் தனியார் வங்கி கொலை வழக்கு தொடர்பாக வங்கி ஊழியர் முருகனுக்கு தொடர்புடைய 15 பேரிடம் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான தனிப்படை போலீசார் இரவில் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com