75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு சிறை கைதிகள்!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு சிறை கைதிகள்!
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு சிறை கைதிகள்!

தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 2 பெண் கைதிகள் உட்பட 60 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் கொடூர குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்து குற்றம் செய்து குற்றத்திற்கு உரிய 65 சதவீதம் குற்ற தண்டனைகளை சிறையில் அனுபவித்த தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் இருந்து 60 சிறை கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில், சென்னை புழல் சிறையில் இருந்து 11 சிறைக் கைதிகளும் வேலூர் சிறையில் 9 சிறை கைதிகளும் கடலூர் சிறையில் இருந்து 12 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திருச்சி மத்திய சிறையில் 9 சிறை கைதிகளும், கோயம்புத்தூர் மத்திய சிறையில் 12 சிறை கைதிகளும், மதுரை சிறையில் இருந்து 1 சிறை கைதியும், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து 4 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் புழல் மற்றும் கோயம்புத்தூர் சிறப்பு பெண்கள் சிறைச்சாலையில் இருந்து இரண்டு பெண் சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உணவுப் பொருட்கள், இனிப்பு உள்ளிட்டவை வழங்கி அவர்கள் சிறை தண்டனையை முடித்து வெளியே செல்லும்போது சிறைக் கைதிகளுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com