தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் : ஆச்சரியப்படவைத்த நேர்மை..! 

தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் : ஆச்சரியப்படவைத்த நேர்மை..! 

தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் : ஆச்சரியப்படவைத்த நேர்மை..! 
Published on

புதுக்கோட்டையில் சிறைக் கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் தவிர விட்டுச்சென்ற ரூ 1.74 லட்சம் பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆயுள் தண்டனை கைதிகள் இருவரை சிறைத்துறை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து பாராட்டினார். 

புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறைக்கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியோடு அவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்தப் பணி கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் 10ம் தேதி பரம்பபூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த போது ரூபாய் 1.74 லட்சத்தை பெட்ரோல் பங்கிலேயை வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை கண்ட அங்கு பணிபுரிந்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளான கார்த்திக், புஷ்பராஜ் ஆகியோர் அந்த பணத்தை எடுத்து மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர். 

இதையடுத்து இன்று ஜானகி ராமனை வரவழைத்து அந்த பணத்தை ஒப்படைத்த சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, கார்த்திக், சிவகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ருக்மணி பிரியதர்ஷினி, “சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்த தான் இந்த ஃப்ரீடம் பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சிறைக்கைதிகளின் பொருளாதாரம் மேம்படும். 

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் 180 விசாரணை கைதிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்த யோகா உள்ளிட்ட மனவள பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் தவறவிட்டு போன பணத்தை எடுத்துக் கொடுத்த இரு சிறைக் கைதிகளின் நன்னடத்தை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது. அவர்கள் இருவரும் விடுதலையாகும் போது தண்டனை குறைப்பு உள்ளிட்ட பயன்கள் அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com