மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற கைதி - திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு

மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற கைதி - திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு
மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற கைதி - திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர் தயா (எ) ஞான வரோதயன் (38). இவர் கடந்த 2 வருட காலமாக சென்னை புழல் சிறை அடைக்கப்பட்டிருந்தார். இவரது வழக்கு முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் அவர் விடுதலை செய்யப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இன்று நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்த வரோதயன், தன்னை விடுவிக்க கோரி மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த சக கைதிகள் அவரை காப்பாற்றினர்.

அதன் பின்னரும் ஞான வரோதயன் மரத்தின் மீது ஏறி தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு தற்கொலை போராட்டம் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com