கைதி பெட்ரோல் பங் : சிறைத்துறை புது முயற்சி

கைதி பெட்ரோல் பங் : சிறைத்துறை புது முயற்சி

கைதி பெட்ரோல் பங் : சிறைத்துறை புது முயற்சி
Published on

தமிழக சிறைத்துறை சார்பில் வேலூர் மத்திய சிறை வளாகத்தில் அமைய உள்ள பெட்ரோல் பங்க் இடத்தை சிறைத்துறை ADGP ஆய்வு செய்தார். தமிழக சிறை துறை சார்பில் தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோல் பங்க் அமைக்கப்படவுள்ளது. அதில் ஒரு பகுதியான வேலூர் மத்திய சிறை வளாகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ள பெட்ரோல் பங்குக்கான இடத்தை சிறைதுறை ADGP அஷ்தோஸ் சுக்லா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் பெட்ரோல் பங்க் பணியில் சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளை பணியில் அமர்த்த உள்ளோம் என்றார்

கைதிகளின் நலனுக்காகவும், பயனுள்ள வகையிலும் அமைக்கப்படுகிறது என்றும் இதற்கு பயிற்சியளிக்கப்பட்ட கைதிகளை பயன்படுத்த உள்ளோம் என்றும் கூறினார். மேலும் இது கைதிகள் விடுதலையாகி வெளியே சென்ற பிறகும் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றும். தற்போதைக்கு தமிழகத்தில் 5 மத்திய சிறைளில் பெட்ரோல் பங்க் அமைக்க உள்ளதாகவும் இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் தமிழகத்தில் மற்ற சிறைகளிலும் பெட்ரோல் பங்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

சிறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்ற தொழில்கள் மூலம் கடந்த ஆண்டு 60 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக கூறிய சுக்லா மேலும் வேலூர் மத்திய சிறையில் கைதிகளின் செல்போன் பயன்பாட்டை தடுக்க ஏற்கனவே ஒரு ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் ஒரு ஜாமர் கருவி இந்த ஆண்டுக்குள் பொருத்தப்படும் என்றும் சிறைதுறை ADGP அஷ்தோஸ் சுக்லா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com