\
“இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும்”- போலீசாரை ஏமாற்றி கைதி ‌தப்பியோட்டம்

“இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும்”- போலீசாரை ஏமாற்றி கைதி ‌தப்பியோட்டம்

“இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும்”- போலீசாரை ஏமாற்றி கைதி ‌தப்பியோட்டம்
Published on

ராணிப்பேட்டை அருகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர்மீது மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள்
நிலுவையில் உள்ளன. மதுராந்தகம் அடுத்த அணைக்கட்டு பகுதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர், வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், விசாரணைக்காக வெங்கடேசனை போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீண்டும் அவரை வேலூர் சிறைக்கு அழைத்துச்
செல்லும் போது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறிய வெங்கடேசன் வாலாஜா சுங்கச்சாவடி அருகே இறங்கி தப்பியோடினார். அவரைத்
தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com