\
போக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு

போக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு

போக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு
Published on

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த ராம்ராஜ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கின் கீழ் காவல்துறையினர் ராமராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக சிறையில் இருந்த ராமராஜ்க்கு, நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிறைத்துறை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமராஜ்க்கு ஏற்கெனவே இருதய கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது.

சேலம் மத்திய சிறையில் கடந்த 22-ஆம் தேதி ஆயுள் தண்டனைக் கைதி செல்வம் உயிரிழந்ததை தொடர்ந்து மீண்டும் ஒரு சிறைக் கைதி உயிரிழந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com