நவராத்திரி விழாவில் பக்திப்பரவசத்துடன் வழிபட்ட பிரதமர் மோடி

நவராத்திரி விழாவில் பக்திப்பரவசத்துடன் வழிபட்ட பிரதமர் மோடி
நவராத்திரி விழாவில் பக்திப்பரவசத்துடன் வழிபட்ட பிரதமர் மோடி

குஜராத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் வழிபட்டார். 

நவராத்திரி விழா வடமாநிலங்களில் களைகட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் துர்கா சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார். 

இவ்விழாவில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் விஜய் ருபானி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடி நடனமாடி துர்கையை வழிபட்டுச் சென்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com