கலாமின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி

கலாமின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி

கலாமின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி
Published on

ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு மதுரை வந்தார். அங்கு அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, காலை 11.30 மணிக்கு அப்துல்கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். இதன்பின் கலாமிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் சிலைகளையும் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து கலாமின் குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பிறகு கலாமின் வாழ்க்கையை விளக்கும் அப்துல் கலாம் 2020 என்ற கண்காட்சி ஊர்தி பயணத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த பேருந்து ராமேஸ்வரத்தில் இருந்து பல்வேறு ஊர்களின் வழியாக அப்துல் கலாமின் பிறந்த நாள் அன்று டெல்லி சென்றடைகிறது.

இதனிடையே, அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை பார்வையிட பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com