விஜயகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி

விஜயகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி

விஜயகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி
Published on

விஜயகாந்த் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தொலைபேசியில் பிரேமலதா விஜயகாந்திடம் தெரிவித்தார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதன் காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் விஜயகாந்த் கடந்த 14 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோய் காரணமாக விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்டன. தற்போது மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பிரேமலதாவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். மேலும் விஜயகாந்த் விரைந்து நலம் பெற்று திரும்ப வேண்டிக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com