புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி! பாலத்தின் சிறப்புகள் என்ன?
ராமநாதபுரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
புதிய பாலத்தின் சிறப்புகள் என்ன?
ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டில் ரயில் பாலம் கட்டப்பட்டது
ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் பாலம்
நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் பாலம் அதன் உறுதித்தன்மையை இழந்ததால் புதிய பாலம்
2.08 கி.மீ நீளம், கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்திலும் பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது
பாலத்தில் 333 கான்கிரீட் அடித்தளம், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள், 72.5மீ. லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது
பாம்பன் பாலத்தின் நடுப்பகுதி 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
நீடித்த ஆயுள், குறைந்த பராமரிப்புத் தேவைகளை கொண்ட வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது
எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைப்பு
இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்தினார்.
முன்னதாக பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட திட்டமிட்ட காங்கிரஸ் மாநில இளைஞரணி செயலாளர் நவிஷத் அலி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து கருப்பு பலூன்கள் மற்றும் பதாகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி ரமேஸ்வரம் சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி, ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பிரதமர் வருகையையொட்டி பாம்பன் பாலத்தில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு கண்டறியும் சோதனையில், மத்திய வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஈடுபட்டனர்.
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி, வாலாஜாபாத் - ராணிப்பேட்டை, விழுப்புரம் - புதுச்சேரி உள்ளிட்ட ரூ.7,750 கோடி மதிப்பிலான 4 வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். புிரதமர் தொடங்கி வைக்க உள்ள தாம்பரம் - ராமேஸ்வரம் விரைவு ரயில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.