மார்ச் மாதம் 3 முறை தமிழகம் வரும் மோடி
மார்ச் மாதம் 3 முறை தமிழகம் வரும் மோடிweb

மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சை.. மார்ச் மாதம் 3 முறை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதத்தில் 3 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
Published on
Summary

மார்ச் மாதம் மூன்று முறை தமிழ்நாடு வரவிருக்கும் பிரதமர் மோடி, மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு பகுதியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடி, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மார்ச் மாதம் மூன்று முறை தமிழ்நாடு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதோடு, எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு பகுதியையும் திறந்துவைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

modi
modi

மேலும், திருப்பரங்குன்றம் சுவாமி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர்க லந்துகொள்கிறார். அதேநாளில் புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மார்ச் 7ஆம் தேதி வேலூரிலும், 11ஆம்தேதி திருச்சி, தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com