"ராமரின் தூதராக பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டிற்காக உழைத்து வருகிறார்" - ஆளுநர் ரவி பேச்சு

"ராம ராஜியத்தின் துவக்கத்தை பிரதமர் மோடி செய்துள்ளார். அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் ராம ராஜியமாக இந்தியா மாற அனைவரும் உழைக்க வேண்டும்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
Governor RN.Ravi
Governor RN.Ravifile

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் நடைபெறும் "சென்னையில் அயோத்தி நிகழ்ச்சி"யில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்... "இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். சுதந்திர தினம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று ஒரு நாள் இது. ராமராஜியத்தின் அஸ்திவாரம் அமைத்த நாள் இன்று. ராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு நான் சென்றுள்ளேன், குக்கிராமங்களில் கூட ராமர் குறித்த கதைகளை கூற கேட்டுள்ளேன்.

ram pran pratishtha - modi
ram pran pratishtha - modi

வேறு வேறு மொழிகள் பேசும் நபர்கள், வேறு வேறு உணவு பழகங்கள் உடையவர்கள், வேறு வேறு மொழி பேசும் நபர்கள் என யாராக இருந்தாலும் ராமர் குறித்த கதைகள் அவர்களிடம் இருக்கும். தமிழகத்தில் எங்கெல்லாம் அவர் பயணம் செய்து இருந்தாரோ அங்கெல்லாம் அவரின் இருப்பை நான் உணர்ந்துள்ளேன்.

தமிழ் மொழின் இலக்கியங்களை படித்து பார்த்தால் ராமர் குறித்து குறிப்பிட்டுள்ளனர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ராமர் குறித்தும் சீதை குறித்து பதிவிட்டுள்ளார். கர்நாடக இசை முழுவதும் ராமரை சுற்றியே உள்ளன, பரத நாட்டியம் இந்தியாவின் ஆன்மிகத்தை குறிக்கிறது. இலக்கியம், இசை, நடனம் என எங்கு இருந்தாலும் அதில் ராமர் உள்ளார். ஆனால் இன்று மக்கள் ராமர் குறித்த கதைகளை கூற இடங்களை தேடி அலைகின்றனர். ராமர், பாரத், தமிழகத்தை பிரிக்க முடியாது.

ராமரின் தூதராக பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக உழைத்து வருகிறார். இன்று மக்களின் மனதில் அவர் வசிக்கிறார். ராம ராஜியத்தின் துவக்கத்தை பிரதமர் மோடி செய்துள்ளார். மிக பெரிய நாடான இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால். இன்று அப்படி இல்லை. உலகில் நடைபெறும் மாற்றங்களின் மைய புள்ளியாக இந்தியா உள்ளது.

ராமரின் தூதராக பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக உழைத்து வருகிறார். இன்று மக்களின் மனதில் அவர் வசிக்கிறார். ராம ராஜியத்தின் துவக்கத்தை பிரதமர் மோடி செய்துள்ளார்.
ராமரின் தூதராக பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக உழைத்து வருகிறார். இன்று மக்களின் மனதில் அவர் வசிக்கிறார். ராம ராஜியத்தின் துவக்கத்தை பிரதமர் மோடி செய்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்புதிய தலைமுறை

இந்தியா பொருளாதாரத்தில் வளர முடியாது என கூறினார்கள் இன்று உலகில் மிக வேகமாக வளரும் நாடாக மாறியுள்ளோம், விரைவில் 3வது இடத்திற்கு முன்னேறுவோம். உலகில் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடாக இந்தியா உள்ளது. பிரதமர் மோடி இன்று பேசினால் உலகம் முழுவதும் இன்று உற்று கேட்கின்றனர். உலக நாடுகள் உலக பிரச்னைகளுக்கு தீர்வுகளை இந்தியாவிடம் எதிர்பார்க்கின்றனர்.

நாம் அனைவரும் ஒன்று என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகள் மூலம் சனாதன தர்மத்தில் தெரிவித்துள்ளனர். உலகில் வேறு எங்கும் இல்லாமல் இந்தியாவில் மட்டும் இப்படி அனைத்தும் இருக்க காரணம் தெய்வீக அருள். யாதும் ஊரே யாவரும் கேளீர் எந்த கருத்து பாரதத்தில் இருந்தே அனைத்து நாடுகளுக்கும் செல்ல வெண்டும் என்ற வகையில் உள்ளது.

அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் ராம ராஜியமாக இந்தியா மாற அனைவரும் உழைக்க வேண்டும். இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற அனைவரும் உழைக்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு பின்பும் கூட பிரிந்துள்ளோம், மொழி அடிப்படையில், மத அடிப்படையில் தொடர்ந்து சுயநலம் காரணமாக சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர்.

அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் ராம ராஜியமாக இந்தியா மாற அனைவரும் உழைக்க வேண்டும். இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற அனைவரும் உழைக்க வேண்டும்.
அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் ராம ராஜியமாக இந்தியா மாற அனைவரும் உழைக்க வேண்டும். இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற அனைவரும் உழைக்க வேண்டும்.
PM Modi
PM Modipt desk

காலை முதல் என்னுடைய கருத்தை முழுமையாக பேச முடியாத அளவிற்கு மகிழ்ச்சியில் வாயடைத்துள்ளேன். வரலாற்றின் மிக முக்கிய நாள் இன்று" என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com