\
“கொரோனா தொற்று நோயை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” - ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து!

“கொரோனா தொற்று நோயை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” - ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து!

“கொரோனா தொற்று நோயை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” - ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து!
Published on: 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அவரின், ட்விட்டர் பக்கத்தில் “தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தேசத்தின் வளர்ச்சியிலும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதிலும் இணைந்து செயல்படுவோம். கொரோனா தொற்று நோயை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று வாழ்த்து கூறியிருப்பவர், மேலும், “தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் , புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com