தமிழ்நாட்டில் பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் பிரதமர் மோடிpt web

LIVE BLOG : ”ஆபரேஷன் சிந்தூரில் வெளிப்பட்டது இந்தியாவின் பலம்” - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி வந்தடைந்தார்.

தொடர் நேரலை

விமான நிலையத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

PMModi
PMModi

தமிழகத்தின் வளத்தை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தின் ஆற்றல் வளத்தை முழுதும் பயன்படுத்த தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. விமான நிலையம் நெடுஞ்சாலை, ரயில்வே ஆகியவைக்கு இடையே பரஸ்பர உறவை மத்திய அரசு செய்து வருகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தின் தொடக்கவிழா தென் திசையின் புதிய முன்னெடுப்பு. இந்த முனையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பயணிகளை வரவேற்கும். இதற்கு முன்பு இங்கு 3 லட்சம் பயணிகள் மட்டும் கையாளும் வகையில் இருந்தது. இந்த புதிய முனையம் தொடங்கப்பட்ட பின்னர் தூத்துக்குடியின் இணைப்பு தேசத்துடன் அதிகரிக்கும். தமிழகத்திற்கு பெரு நிறுவன வருகை, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுற்றுலாவிற்கான ஆற்றல் அதிகரிக்கும்.

இந்த புதிய திட்டங்கள் தூத்துக்குடி துறைமுகத்தை சிறப்படைய செய்யும். வர்த்தகம் வேலைவாய்ப்புக்கான புதிய பாதைகள் பிறக்கும். மத்திய அரசு ரயில்வே துறையை தொழிற்துறையின் உயிர் நாடியாக கருதுகிறது. வளர்ச்சி தர்சார்பு பாரத்தின் நோக்கமாக கொண்டுள்ளது தமிழகத்தில் ரயில்வே துறையின் கட்டமைப்பு நவினமாகிவரும் மையமாக உள்ளது

பாம்பன் பாலத்தால் பயனத்தின் சுலபத்தன்மையும் வர்த்தகத்தின் சுலபதன்மையும் உயர்ந்துள்ளது. நவீன கட்டமைப்புகளை மேம்படுத்தும் வேள்வி தேசத்தில் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் சினாப் பாலம் பொறியல் துறையின் அற்புதமாக பார்க்கபடுகிறது. தமிழகத்திற்காக அர்பபணிக்கப்பட்ட ரயில் திட்டங்களால் தென் தமிழகத்தில் லட்சகணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்

புதிய ரயில் திட்டங்களால் வந்தேபாரத் ரயில் சேவைக்கான வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. 2000 மெ.வா மின் உற்பத்தி செய்யும் கூடங்களும் 3 மற்றும் 4 அலகின் மூலம் தேசத்திற்கு தூய்மையான மின் சக்தியை கொண்டுவரும் பங்களிப்பை செய்ய உள்ளது. இந்த எரிசக்தி பாரத்தின் எரிசக்தி சுற்று சூழல் எரிசக்தியின் ஊடகமாக மாறும். தொழில் துறை வளர்ச்சி உள்ளுர் மக்களுக்கான லாபமாக மாறும். பிரதமர் சூரிய சக்தி மின் திட்டத்திற்காக 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 40 ஆயிரம் வீடுகளுக்கு பொறுத்தபட்டுள்ளது. இந்த மின்சக்தி பசுமை வேலைவாய்ப்புக்கான வாய்பையும் உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு மூன்று லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களை ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம். இந்த 11 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது

பிரதமர் மோடி உரையாற்றுகையில், “கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு ராமேஸ்வரம் பூமியில் கால் வைத்துள்ளேன். அயல்நாட்டு பயணங்களில் வலாற்றுப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தை படைப்போம். வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப்பணியில் கொண்டு செல்லும் பணி 2014ல் தொடங்கியது. உள்கட்டமைப்பும், எரிசக்தியும் எந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பு. தமிழ்நாட்டில் சாலைகள், எரிசக்தி, விமான நிலையங்கள் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அழகுமுத்துக்கோன் போன்றோர் உதவினர். வ.உ.சியின் தொலைநோக்கு போற்றுதலுக்கு உரியது. கடலில் சுதேசி கப்பல்களை விட்டு ஆங்கிலேயர்களுக்கு வ.உ.சி சவால் விட்டவர்.

தூத்துக்குடியைப் போன்றே காசியை நேசித்தவர் பாரதி. பாரதியின் தூத்துக்குடிக்கும், எனது தொகுதியாக காசிக்கும் தொடர்பு உள்ளது. தூத்துக்குடியின் முத்துக்களை பில்கேட்ஸூக்கு கடந்த ஆண்டு பரிசளித்தேன். பொருளாதார வல்லமையை உணர்த்தியவை பாண்டி நாட்டு முத்துகள்.

இந்தியாவின் 99% பொருட்களை பிரிட்டனில் வரி இல்லாமல் விற்க முடியும். உலகின் 3ஆவது பொருளாதாரமாக இந்தியா ஆகும். பிரிட்டனில் இனி இந்தியப் பொருட்களுக்கு சலுகை. பிரிட்டனுடன் செய்த ஒப்பந்தத்தால் தமிழக இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு கிடைக்கும். மேக் இன் இந்தியா வலிமையை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் பலம் வெளிப்பட்டது. பயங்கரவாதிகளின் கட்டமைப்பை அழித்ததில் மேக் இன் இந்தியா முக்கியப்பங்கு வகித்தத” எனத் தெரிவித்தார்.

தமிழில் வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி...

தூத்துக்குடி விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி.

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்வழித்தட பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடியில் ரூ.550 கோடியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 285 கோடியில் வடக்கு சரக்கு தளவாட நிலையம் 3ஐ திறந்து வைத்தார்.

கூடங்குளம் யூனிட் 3,4இல் இருந்து மின்சாரம் எடுப்பதற்கான மின் பகிர்மான அமைப்பு தொடக்கம்

தென் தமிழகத்தின் நுழைவு வாயில் தூத்துக்குடி

ராம்மோகன் நாயுடு
ராம்மோகன் நாயுடு

நிகழ்வில் பேசிய ராம்மோகன் நாயுடு, “தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி மாறும். தென் தமிழக தொழில் வளர்ச்சி பெருகும். விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரியரக விமானங்கள் தரையிறங்க முடியும். தூத்துக்குடியில் இருந்து பிற இந்திய நகரங்களுக்கு இனி எளிதாக செல்ல முடியும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூரிய மின் சக்தி மூலம் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு 50 நாளுக்கும் ஒரு புதிய விமான நிலையம் திறக்கப்படுகிறது. சென்னை, திருச்சி விமான நிலையங்களை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய விமான நிலையங்கள் மூலம் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். புதிய விமான நிலையம் மூலம் தமிழக கலாச்சாரத்தை உலகம் இன்னும் ஆழமாக அறியும்” எனத் தெரிவித்தார்.

விழா மேடையில் பிரதமர்

11 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி

எல்.முருகன்
எல்.முருகன்

விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டு முதல்முறையாக தமிழகத்திற்கு வந்திருக்கிறார். பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 12 லட்சம் கோடி ரூபாய் தமிழக வளர்ச்சிக்கான நிதியாக கொடுத்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

பிரதமருக்கு நினைவுப்பரிசு

பிரதமருக்கு நினைவுப்பரிசு வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு
பிரதமருக்கு நினைவுப்பரிசு வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியான நினைவுப்பரிசை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

வேலைப்பளு அதிகம்

ஓபிஎஸ்-ஐ சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி, “பிரதமருக்கு வேலை நெருக்கடி அதிகம் இருப்பதால், அவரால் சிலரை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி

தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மாலத்தீவு 60ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். மாலத்தீவுகளில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல். முருகன், ராம் மோகன் நாயுடு, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.

PMModi
PMModi

தூத்துக்குடி விமான நிலையத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய கட்டடத்தை பிரதமர் திறந்துவைக்க உள்ளார். அதோடு, 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இரண்டு நான்கு வழிச் சாலைகளை நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். அதோடு, ரயில்வே, மின்சாரத் துறைகளில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து திருச்சி புறப்படும் அவர் அங்கு விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார். நாளை அரியலூர் அருகே கங்கைக்கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com