நாளை முதல் ( செப்டம்பர் 1) இதெல்லாம் விலை உயர்கிறதாம்.. எங்கே? என்னென்ன தெரியுமா?
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வால் இந்த முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் ஒன்றாம்
தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப் போன்றவற்றுக்கு சுங்கக் கட்டணமாக ஒரு முறை பயணிக்க 105 ரூபாயும், பல முறை பயணிக்க 155ல் இருந்து 160 ரூபாய் ஆகவும் உயர்த்தபட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 180ல் இருந்து 185 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரிகள், பேருந்துகள் ஒரு முறை பயணிக்க 360ல் இருந்து 370 ரூபாய் ஆகவும், இருமுறை பயணிக்க 540ல் இருந்து 555 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது..
அதனைத் தொடர்ந்து, நாளை முதல் (செப்டம்பர் 1) நாளை முதல் டீ, காபி விலை சென்னையில் உயர்கிறது என்று டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் டீ 10, 12ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
காபி 15ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நாளை முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பால் விலை உயர்வு, காபி தூள் விலை உயர்வு, டீ தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்றப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ காபி விலை உயர்த்தப்படுகிறது என்படு குறிப்பிடத்தக்கது..