\
ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கம்pt web

தீபாவளி பண்டிகை நாள் | இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை என்ன? 17 நாட்களில் இவ்வளவு உயர்வா?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு கண்டுள்ள நிலையில், 17 நாட்களில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
Published on

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு கண்டுள்ள நிலையில், 17 நாட்களில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலங்களையொட்டி தங்கம் விலை இவ்வளவு ஏற்றம் கண்டுவருவது பொதுமக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கம்pt web

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 7 ஆயிரத்து 455 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் விலை அதிகரித்து 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் 109 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 17 நாட்களில் தங்கம் சவரனுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு பொருளாதார காரணங்கள் கூறப்பட்டாலும், மகளின் திருமணம், சீர்வரிசை என கட்டாயத் தேவைக்கு தங்கம் வாங்குபவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com