\
குடியரசுத் தலைவர் உதகை வருகை: வாகன அணிவகுப்பு ஒத்திகையால் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்

குடியரசுத் தலைவர் உதகை வருகை: வாகன அணிவகுப்பு ஒத்திகையால் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்

குடியரசுத் தலைவர் உதகை வருகை: வாகன அணிவகுப்பு ஒத்திகையால் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்
Published on

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உதகைக்கு நாளை வருவதை முன்னிட்டு, வாகன அணிவகுப்பு ஒத்திகை முன்னறிவிப்பின்றி திடீரென நடைபெற்றது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை பிற்பகலில் உதகைக்கு வருவதையொட்டி, உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முதல் ராஜ்பவன் வரையிலும் மற்றும் ராஜ்பவன் முதல் ராணுவ பயிற்சி மையம் வரையிலும் பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது. அதனால் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் குன்னூர் உதகை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர். உதகை குன்னூர் இடையே இந்த ஒரு சாலை மட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com