\
மதுரை ஆட்சியருக்கு குடியரசுத் தலைவர் விருது!

மதுரை ஆட்சியருக்கு குடியரசுத் தலைவர் விருது!

மதுரை ஆட்சியருக்கு குடியரசுத் தலைவர் விருது!
Published on

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் மற்றும் மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரராகவ ராவ் ஆட்சியராக பொறுப்பேற்றதில் இருந்து, தமது பணியினை சிறப்பாக மேற்கொள்வதாக பலரும் பாராட்டி உள்ளனர். இந்நிலையில் அவருக்கு இத்தகைய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் வீரராகவ ராவ் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு, தூய்மை இந்தியா விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com