\
இன்று தமிழகம் வருகிறார் ராம்நாத் கோவிந்த்: பாதுகாப்பு அதிகரிப்பு

இன்று தமிழகம் வருகிறார் ராம்நாத் கோவிந்த்: பாதுகாப்பு அதிகரிப்பு

இன்று தமிழகம் வருகிறார் ராம்நாத் கோவிந்த்: பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தருகிறார்.

டெல்லியில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் சென்னை வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் நாளை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூரில் உள்ள பொற்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

தொடர்ந்து வரும் 11ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ளும் அவர், பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையப் பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com