\
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு!
Published on

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கடந்த 17-ந் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.  இவர்களில், விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது.

இவர்களில் வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com